மறுபடியும் முதல்...ல இருந்தா...!! இந்தியாவில் மீண்டும் உயரத் தொடங்கிய கொரோனா !! 4 வது அலை தொடக்கமா?!

 
கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக நீடித்து வருகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. நேற்று 14 பேர் இறந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பது கவலை அளிக்கிறது.

கொரோனா
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 2,822 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று தினசரி உயிரிழப்பு 14 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் பலியாகியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இதன் மூலம் மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 611 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,070 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 17 ஆயிரத்து 698 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,93,31,57,352 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று ஒரே நாளில் 2,28,823 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த கொரோனா அப்டேட் தகவல்கள் அனைத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில், தென் ஆப்பிரிக்காவில் பரவிய புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் மராட்டிய மாநிலத்தில் 7 பேருக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மராட்டிய மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web