முழு பாடங்களும் நடத்தப்பட வேண்டும்!! ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.இதனால், கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10-ம் வகுப்புக்கு 39 சதவிதம், 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவிதம், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவிதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.அதே போல் கடந்த 2 ஆண்டுகளாக 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

மாணவர்கள்

இந்நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 12-ம் வகுப்புக்கு 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 27-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த கல்வியாண்டு கொரோனாவிற்கு முந்தைய கல்வியாண்டுகளை போல் செயல்படும் என ஏற்கனவே அமைச்சர் அறிவித்திருந்தார். 

மாணவர்கள்

தற்போது இது குறித்து செய்திக்குறிப்புஒன்றை வெளியிட்டுள்ளார். நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகள் செயல்படும் நேரங்களை அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம். அனைத்து சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கபடும். மாணவர்களை அரவணைத்து பாடங்களை நடத்த வேண்டும் என பல அறிவிப்புக்களை நேற்றே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த வேண்டும். மாணவர்கள் கற்றலில் முழுமையடையவேண்டும். தடையில்லா கல்வி பெற வேண்டும்  என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும், வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டால், திரும்ப தரப்படாது என்று திட்டவட்டமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web