800 படங்களில் பணியாற்றிய பிரபல திரைப்படத் தொகுப்பாளர் கௌதம் ராஜூ காலமானார்!

 
கெளதம் ராஜூ

பிரபல திரைப்படத் தொகுப்பாளர் கௌதம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

கௌதம் ராஜூ தென்னிந்தியத் திரைப்படத் துறையில் முதன்மையாகப் பணியாற்றிய இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். அவர் சில பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். அவரது தொழில் வாழ்க்கை முழுவதும், பல்வேறு திரைப்படத் துறைகளில் நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றியுள்ளார்.

கெளதம் ராஜூ

கிட்டத்தட்ட 800 படங்களில் பணியாற்றி உள்ள இவர், 1982-ல் நாலு ஸ்தம்பலாட்டா படத்தின் மூலம் திரைப்படத் தொகுப்பாளராக தொடங்கினார். அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் தளபதி, சட்டசபை ரவுடி மற்றும் பல சூப்பர் ஹிட் படங்கள் உட்பட பல்வேறு மொழிகளில் பணியாற்றினார். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150, பவன் கல்யாண் கப்பர்சிங், ரவி தேஜாவின் கிக், அல்லு அர்ஜுனின் ரேஸ் குர்ரம் மற்றும் என்டிஆரின் அடர்ஸ் போன்ற டாப் ஹீரோ படங்களுக்கு திரைப்படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

கெளதம் ராஜூ கடைசியாக மோகன் பாபுவின் சன் ஆஃப் இந்தியா படத்தில் பணியாற்றினார். டைமண்ட் ரத்னபாபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. இவர் சமீபத்தில் ராமுடு அனுகோலேதி ஜானகி கலகனலேடு என்ற படத்திலும் பணியாற்றினார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

கௌதம் ராஜூ கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேற்று நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்து, அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிகிறது. கௌதம் ராஜூவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web