தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
gold actress

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று விலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

nayanthara gold jewels

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனையாகிறது. 

gold jewel actress sneha

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,903-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் குறைந்து, ரூ.3,887-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web