தங்கம் விலை மேலும் சரிவு! சவரனுக்கு 280 ரூபாய் குறைவு!

 
தங்கம்

ஆபரண தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு இந்தியாவில் வேகமாக மாறி வருகிறது. தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்த பழைய ஆர்வம் மீண்டும் துளிர்விடுவது கடினம் என்கிறது உலக தங்க கவுன்சிலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. தங்கத்திற்கு பல முனைகளில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. 

தங்கத்தின் நுகர்வை குறைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வயிறு எரியும் அளவுக்கு தங்கத்தின் மீது வரி மேல் வரி விதித்து வருகிறது. இப்படி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்தது விற்பனையாகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,911-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 28 ரூபாய் குறைந்து, ரூ.3,883-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web