தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைவு! மேலும் குறையுமா?

 
தங்கம்

ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது நகை ப்ரியர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் தங்கத்தின் விலை மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.200 குறைந்ததையடுத்து, பலரும் நகைகளை வாங்க ஆர்வமுடன் நகை கடைகளை நோக்கி படையெடுத்தனர். திடீரென நேற்று காலை, அடுத்த 12 மணி நேரத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. ஒரே நாளில் சவரனுக்கு மொத்தமாக ரூ.560 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம் முந்தைய தினம் நகைகளை வாங்கியவர்கள் இந்த விலைக் குறைப்பை அதிர்ச்சியுடன் பார்க்க துவங்கினார்கள். தற்போது பங்கு சந்தை உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலை மேலும் குறையவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நீண்ட கால முதலீடுகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது தவறில்லை. ஆனால், சிறுக சிறுக சேர்த்து நகை வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்கலாம் என்கிறார்கள். ஆபரணத் தங்கத்தின் விலை அட்சயதிருதியை, தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்தம் நிறைந்த நாட்களில் வழக்கத்தை விட விலை அதிகரிக்கும். அந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் நகைகளை வாங்குவதன் காரணமாக அதிக கொள்முதல் இருக்கும். இதனால் வணிக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்த்தப்படும்.

தங்கம்

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலையில் நேற்றைய முன் தினமும், நேற்றும் சரிவு ஏற்பட்டது. 

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து, ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ரூ.37,520-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதே போல், 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,879-க்கு விற்பனையான நிலையில், நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 37 ரூபாய் குறைந்து, ரூ.3,842-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web