தங்கம் அதிரடி விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!!

 
தங்கம் நகைக்கடை

சர்வதேச தங்கத்தின் விலைகள், செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளூர் வரிவிதிப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும். 

இன்றைய தங்கத்தின் விலை, நேற்றைய தங்கத்தின் விலையை விட மாறுபட்டதாக இருக்கும். இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்பதால், அன்றைக்கு மட்டும் தங்கத்தின் விலை மாறாது. பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும்.

தங்கம்

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய்  உயர்ந்து, ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய்  உயர்ந்து, ரூ.38,120-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,887-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து, ரூ.3,903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web