தங்கம் அதிரடி விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் இன்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் தங்கத்தின் விலை  ஏறுமுகமாக இருந்து வருகிறது.

தங்கம்

ஆனால் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் நகைக்கடைகளில் தங்கத்தினை வாங்கி குவித்தனர். ஆனால் அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மட்டும் தான் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. 

தங்கம்
இன்றைய விலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது.  இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web