தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கம்

தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரேயடியாக சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரேயடியாக கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது இல்லத்தரசிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைய உள்ள நிலையில், திருமணத்திற்காக நகைகளை வாங்க காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த விலை குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது, அதனை தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. மேலும் தங்கம் விலை ராக்கெட் விலையில் அதிகரித்து இருந்தாலும் கடந்த வாரம் தங்கம் விலையானது குறைந்தது. அதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக குறைந்து விற்பனையான நிலையில், நேற்று உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.37,880-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web