தங்கம் அதிரடி விலை குறைப்பு!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
gold jewel actress sneha

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களகவே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. திடீரென சரியும் விலை அடுத்த நாளே அதிகரித்தும் வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் தொடுவதால் நடுத்தர மக்கள்  அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

gold actress

ஜூலை மாதத்தில் தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு நேர்மாறாக  அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.ஜூன் மாதத்தின் இறுதி நாட்களில் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் கடும் சரிவை சந்தித்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத்தின் தொடக்கம் முதலே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.  ஜூலை 4,5 தேதிகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,400க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,800க்கு மேலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

nayanthara gold jewels
கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.104 அதிகரித்து சவரனுக்கு ரூ.37,512-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.4,689க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,440க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம்   ரூ.4,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி , ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web