தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
gold actress

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் இந்தியாவில் தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அது முதல் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை பெரும் சரிவை சந்தித்தது. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து நகைகளை வாங்கி குவித்தனர்.

gold jewel actress sneha

அக்டோபர் மாதத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்ற வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் அவர்களை ஆறுதல் படுத்தும் வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

nayanthara gold jewels
இன்றைய விலை நிலவரப்படி  சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு  ரூ.1.20 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web