மீண்டும் குறைந்தது தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைவு!

 
தங்கம்

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை அட்சயதிருதியை, தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்தம் நிறைந்த நாட்களில் வழக்கத்தை விட விலை அதிகரிக்கும். அந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் நகைகளை வாங்குவதன் காரணமாக அதிக கொள்முதல் இருக்கும். இதனால் வணிக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்த்தப்படும்.

தங்கம் 

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலையில் நேற்று சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து, ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ரூ.37,520-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,879-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 37 ரூபாய் குறைந்து, ரூ.3,842-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,800 ரூபாய் குறைந்து, ரூ.60,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web