தங்கம் விலை அதிரடி உயர்வு! நகைப் ப்ரியர்கள் அதிர்ச்சி!

 
இன்று (நவம்பர் 24) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 136 ரூபாய் சரிந்தது!

தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று காலையிலேயே அதிகரித்து, நகைப் ப்ரியர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஒரு சவரன் தங்கம் இன்று காலை நேர நிலவரப்படி ரூ.48 உயர்ந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அதனால் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும், தங்கத்தை அமெரிக்க டாலரில் கொடுத்து வாங்குகின்றன. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். எனவே, நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். 

Gold Bangles

அரசாங்கமும் தங்கத்தை வாங்குவதற்காக அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்கிறது. மாறாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது. தங்கத்தை இறக்குமதி செய்ய, அதிக டாலர்களை செலவு செய்யத் தேவையில்லை. இதனால் தங்கத்தின் விலை குறைகிறது.

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனையாவதால் நகை பிரியர்கள் அதிரச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,903-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து, ரூ.3,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web