குட் நியூஸ்! மாணவர்களுக்கு இந்த பாடம் முழுவதுமாக ரத்து! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

வரும் கல்வி ஆண்டில் இருந்து, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை. தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கடந்த 2018-2019 ஆம் ஆண்டு 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு நிதியில் கடந்த 2018-ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது. 

மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

அதன்படி, தையல், அழகுக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி  பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும். வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்களே இருக்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web