குட்நியூஸ்!! மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள்!! அதிரடி அறிவிப்பு!!

 
மாற்றுத்திறனாளி


சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மாற்றுத்திறனாளி மணமக்கள் திருமணம் கோவில்களில் நடத்தப்பட்டால் அத்திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். என அறிவித்திருந்தார். அமைச்சரின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்று திறனாளிகள்

இது குறித்த தொடர் அறிவிப்பாக  மானிய கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்  “திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடத்தப்படும். பராமரிப்பு கட்டணம் மற்றும் செலுத்தினாலே போதுமானது.

மாற்றுத் திறனாளிகள்

அத்துடன்  இத்திட்டத்தின் கீழ் நடைபெறும்  திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அமைச்சரின் இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில்  திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் திருக்கோயில் சார்பாக மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை