பணி நேரத்தில் போதையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!! பகீர் ரிப்போர்ட்!!

 
மதுரை ராஜாஜி மருத்துவமனை

மதுரை  மாவட்டம்  ராஜாஜி  மருத்துவமனையில் பணிநேரத்தில் ஊழியர்கள் மதுபோதையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ குணங்கள் கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை டீன்

இம்மருத்துவமனையில் 24 மணி நேரம் அவசர சிகிச்சை உதவி மற்றும் ஆய்வுக்கூட வசதி ஆகியவை உள்ளன. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் இதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் சில ஊழியர்கள் பணியின் போது மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

madurai junction

இந்நிலையில், புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களை சோதனை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மதுபோதையில் இருக்கும் ஊழியர்களை கண்டறிய மருத்துவ சுவாசக் கருவி கொண்டு சோதனை செய்ய உள்ளது.

இதுகுறித்து  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  மருத்துவமனை ஊழியர்கள் பணியின் போது போதையுடன் உள்ளதாக புகார் எழுந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் மதுபோதையில் இருப்பது உறுதியானால் துறைரீதியாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web