அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் வேட்டி சட்டை அணிய வலியுறுத்தல்!

 
வேட்டி ஆண்கள் ஊழியர்கள் அரசு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வாரத்டில் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து அலுவலகம் வர வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவில் மொழி, இனம், சமயம், நிறம், வாழிடச்சூழல் போன்ற பல்வேறு பிரிவுகளால் மக்கள் பிரிந்திருந்தாலும் இந்தியர் என்ற உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கிறது. உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்கக்காரணம்; வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பான்மையேயாகும்.

இந்தியாவில் மொழியும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும், விருந்தோம்பல் முறைகளும் மிகச்சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் பாரம்பரியமான வேஷ்டி சேலை உடையை மக்கள் அணிகின்றனர். தமிழர்களின் கலாசாரம் இதுதான்.

அரசு ஊழியர்கள்

இந்நிலையில் தமிழக மக்களை பாரம்பரிய உடைகளை அணிய வைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் கட்டாயம் வேஷ்டி, சேலை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த 2014 கால கட்டத்தில், ஜனவரி 6-ம் தேதி வேட்டி தினமாக அரசு அறிவித்தது, தமிழகம் முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி அணிய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதினேன். 

அதிர்ச்சி! சகாயம் ஐஏஎஸ்-க்கு கொரோனா !

அப்போது 20-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தனர்.மேலும் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாண, மாணவிகளும் நம் பாரம்பரிய உடையை அணிந்து வந்து பெருமைபடுத்தினார்கள். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய நெசவாளர்களின் வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் நமது பாரம்பரிய உடைகள் அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web