தேர்வில் பாஸாகியும் 24 வருஷங்கள் கழித்து அரசு வேலை! பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் ஆசிரியரானார்! அரசின் மெத்தன போக்கால் அவலம்!

 
பிச்சைக்காரர்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படாப்பட்டினம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தில் வசித்து வருபவர் அல்லகா கேதாரேஸ்வர ராவ் (55). கைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர் பி.எட் முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கேதாரேஷ்வர ராவின் பெற்றோர் இறந்த நிலையில், உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டு வேலையின்றி, அந்த பகுதிகளில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, 1994-ம் ஆண்டு ஆசிரியர் அரசுப் பணிக்கு தேர்வு எழுதிய கேதாஸ்வர ராவ் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வேலையை இழந்தார். 

பிச்சைக்காரர்

பின்னர், 1998-ம் ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்த போதும் பணி கிடைக்காமல் போனது. இதனால், உடை, உணவின்றி ஒருவேளை உணவிற்காக ஏங்கி வந்த இவருக்கு 24 ஆண்டுகள் கழித்து தற்போது பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கேதாஸ்வர ராவுக்கு இதுகுறித்து எந்த தகவலும் இல்லை, மேலும் பணி ஆணை வந்திருக்கும் செய்தியைக் கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்து கொண்டார். அவர், சான்றிதழ்கள் வைத்திருப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிச்சைக்காரர்

பிச்சைக்காரராக இருந்து அரசு ஊழியராக உள்ளவரை, அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் குளிக்க வைத்து முடிதிருத்தம் செய்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web