அரசு அதிகாரிகள் என் எதிரிலேயே மகனைச் சுட்டுக் கொன்றார்கள்! ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்!

 
சஞ்சய் ஐஏஎஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தன் கண் முன்னாலேயே தனது மகனை சுட்டுக் கொன்று விட்டனர் என ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கழிவு நீரகற்று வாரியத்தின் செயலாளராக சஞ்சய் போப்லி பணிபுரிந்து வந்தார். அவர் பணி காலத்தின் போது கழிவு நீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை கடந்த வாரம் ஒப்பந்ததாரர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சஞ்சய் போப்லியை அதிரடியாக கைது செய்தனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சஞ்சய் போப்லி கைதைத் தொடர்ந்து  அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சஞ்சய் போப்லியையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். சோதனையின் போது, சஞ்சய் போப்லியின் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், ஏராளமான வெள்ளிப் பொருட்கள், கணக்கில் வராத லட்சக்கணக்கிலான ரொக்கப்பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

தனது மகன் கார்த்திக்கை கொலை செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தான் என்று ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லி குற்றம் சாட்டி உள்ளார். 

சஞ்சய் ஐஏஎஸ்

இதுகுறித்து சஞ்சய் போப்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எங்கள் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். மேலும் அவற்றை ஒப்புக் கொள்ளும் படி என்னையும், என் மகன் கார்த்திக்கையும் வற்புறுத்தினார்கள். இந்த தாக்குதலின் போது என் மகன் கார்த்திக்கை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். எனது கண் முன்னே மகன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதற்கு நானே நேரடி சாட்சியாக இருக்கிறேன்’’ என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் இந்த அதிரடி குற்றச்சாட்டு பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சண்டிகர் எஸ்எஸ்பி குல்தீப் சாகல் கூறும்போது, ‘‘லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு இருக்கிறது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சென்று பார்த்த போது, சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.

அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது தந்தையின் கைத்துப்பாக்கியால்தான் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனவே சஞ்சய் போப்லி கூறுவது முற்றிலும் பொய்’’ என்று கூறினார்.

லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார்த்திக் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web