தலைமைஆசிரியர் மீது புகார் அளித்த அரசுப் பள்ளி மாணவிகள்!! பகீர் பிண்ணனி!!

 
மாணவிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ் அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

கலெக்டர்

இந்த நிலையில், அப்பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், தங்களது பள்ளியில் தற்போது பல்வேறு பாடங்களுக்கு பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை என்றும் தலைமை ஆசிரியையிடம் கேட்டால் அவர் ஒவ்வொரு மாணவரும் தலா ரூ. 500 தந்தால் மட்டுமே ஆசிரியரை நியமிக்க முடியும் என கூறுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி
 
புகாரின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதாகவும் குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம் குறித்து உடனடியாக தான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியிடம் பேசுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.இந்த கீழ் அன்பில் பகுதி என்பது தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web