கூகுள் வருவாயில் அரசுக்கு பங்கு!!! மத்திய அரசு அதிரடி!!!

 
கூகுள்

.

நாகரீக காலத்தில் பெரும்பாலான மக்கள் செய்திகளை உடனுக்குடன் தங்கள் கைபேசியிலேயே தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இதன் மூலம் கால விரயம் தடுக்கப்படுகிறது. அதற்கு வழிவகுக்கும் வகையில், செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது.இவற்றை கூகுள், மெடா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி பெருமளவிலான லாபத்தை அடைந்து வருகின்றன. இதில் கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்து கொள்வது குறித்து மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.


இந்திய செய்தி நிறுவனங்கள், இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை கூகுள், மெடா, மெடா, வாட்ஸ் அப், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், அமேசான் பே ஆகிய உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இது போன்றதொரு நிலைப்பாட்டினை ஆஸ்திரேலிய அரசு தொழில்நுட்பத் துறை எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ஐரோப்பிய யூனியனிலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, ‘‘ஏற்கனவே அமலில் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மாற்றங்களின் ஒரு அங்கமாக ஒழுங்காற்று தலையீட்டின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறும்போது, ‘‘டிஜிட்டல் விளம்பரத்தின் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. இதன் மூலம் இந்திய ஊடக நிறுவனங்கள் பாதமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது புதிய சட்டங்கள் மற்றும் விதிகளின் பின்னணியில் தீவிரமாக ஆராயப்படும் ஒரு பிரச்னையாக இருக்கிறது’’ என்றார்.

கூகுள்

வெளிப்படைத் தன்மை கொண்ட சுதந்திரமான செய்தி மற்றும் விளம்பர நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளையும், தகவல்களையும் பயன்படுத்தி கொள்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு உள்ளது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும்  இணைய வழி டிஜிட்டல் செய்தி வாசிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய திட்டத்தின் மூலம் வருவாய் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web