பொதுத்தேர்வு மையங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவுகள்!! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகளில் வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. நடப்பாண்டில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வுகள் சென்ற ஆண்டு நேரடியாக நடத்தப்பட்டன. நடப்பாண்டு ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ்2  பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அரசு தேர்வுகள் இயக்ககம்

அதன்படி தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் பள்ளிகளில் தேர்வு மையங்களாக அறிவிக்கப்படாது. அத்துடன் மாணவர்கள் குறைந்த தூரத்திற்குள் உடனடியாக பயணம் எளிமையான முறையில் பயணம் மேற்கொள்ள முடியும் இடங்களே தேர்வு மையங்களாக அறிவிக்கப்படும். . மேலும் மாணவர்கள் 10 கி.மீ. தூரம் வரை பயணித்து தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும். அதன் முயற்சியாக புதிய  தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு
இது குறித்து முக்கிய முடிவுகள் மற்றும்  பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். சென்ற கல்வியாண்டில் நேரடி வகுப்புகளை மேற்கொண்டும், தேர்வுகளை சிறப்பாக எதிர்கொண்டனர் என்பதால் நடப்பு ஆண்டு பள்ளி தேர்வுகளும் நல்ல முறையில் நடத்தப்படும் என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web