பாட்டியும் பேரனும் இணைந்து ஆடும் நாகினி ஆட்டம்!! வைரலாகும் கலக்கல் வீடியோ!!

 
பாட்டி பேரன் பாம்பு நடனம்

திருமணங்கள் என்றாலே கொண்டாட்டங்கள் தான். திருமணங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனங்கள் ஆடுவதும் வழக்கமே. தற்போது திருமண சீசன் என்பதால் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் பாம்பாக மாறி தனது பேரனுடன் சரிக்கு சரியாக அசத்தல் நடனம் ஆடியுள்ளார். இந்த பாட்டி, பேரனின் நாகினிநடன வீடியோ தான் சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

 


இதில் முதலில் பாட்டியின் பேரன் கைக்குட்டையின் ஒரு முனையை கழுத்தில் சுற்றி போட்டு மறு முனையை கைகளால் மகுடிபோல் பிடித்து ஊதுவது போல் நடனமாடுகிறார். இதனை கண்ட பாட்டியும் பாம்பாக மாறி பேரனுடன் நாகினி நடனம் ஆட தொடங்குகிறார். இந்த வயதிலும் இவர் ஆடும் அற்புத நடனம் அசத்தலாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இவரது நடனத்தை காண அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பாட்டியின் பாம்பு நடனத்தைப் பார்த்து மக்கள் அடக்க முடியாமல் சிரித்து மகிழ்கின்றனர். 

 


இந்த பாட்டி மற்றும் பேரனின் நாகின் நடன வீடியோ இதுவரை மில்லியன் கணக்கானவர்களால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலர் வேடிக்கையான கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு  வருகின்றனர். இந்த வயதிலும் அவர் காட்டிய நடன அசைவுகள் அற்புதம் எனவும், முதியவர்கள் அடிக்கடி முதுகு மற்றும் முழங்கால் வலி என்று சொல்லத் தொடங்கும் வயதில் இந்த பாட்டி இவ்வளவு சுறுசுறுப்பாக நடனமாடுவதை அனைவரும் பார்க்க வேண்டும். அதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web