இன்று சென்னை முழுவதும் குறை தீர்க்கும் முகாம்!! மக்களே பயன்படுத்திக்கோங்க!!
தமிழகத்தில் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அரசின் சலுகைகள், நிவாரண உதவிகள் என அரசின் உதவித் திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இன்று ரேஷன்கார்டுகள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல் அனைத்து கட்ட பணிகளிலும் மேற்கொள்ளப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யவும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன்படி, குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் பொருட்டு மே 2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

அதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகளும் வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களும் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். அத்துடன் சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச் சேவையினை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
