திருமணமான இரண்டே நாளில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை!! பகீர் பிண்ணனி!!!

 
குமரேசன்


 7 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ந.புதூரை சேர்ந்தவர் குமரேசன். கட்டிட தொழிலாளியான இவர் பக்கத்துகிராமத்தை சேர்ந்த இளம் பெண் பவித்ராவை  கடந்த 7 வருடமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தின் வறுமை நிலை அறிந்து ஏராளமாக உதவிகள் செய்த குமரேசன், அந்த பெண்ணை ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். அங்கு நாள் முழுவதும் நிற்பதால் கால் வலிப்பதாக பவித்ரா வேதனை தெரிவித்ததால் அண்மையில் வேறொரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

குமரேசன்

 இந்நிலையில் 7 வருட காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பவித்ரா வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரேசனுக்கு, அவரது அத்தை மகள் தேவப்பிரியாவை அதே தேதியில் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் 7 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்தவள் ஏமாற்றி சென்றதை மறக்க இயலாமல் மனம் நொந்து போன குமரேசன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த பெண்ணுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றும் முள்ளாய் குத்தும் நினைவுகளை மறக்க இயலவில்லை என்றும் சோகத்துடன் குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.

குமரேசன்

குமரேசனின் அவசர புத்தியால் ஒரு பாவமும் அறியாமல், அவரை திருமணம் செய்த பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. திடீர் கணவனின் பொறுப்பற்ற அவசர முடிவால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்தபெண் தவித்து நிற்கிறார். இது குறித்து வெள்ளிமேடுப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான நான்கு நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web