குரூப் 2, 2ஏ தேர்வு விடைகள் வெளியீடு!! டிஎன்பிஎஸ்சி அதிரடி!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் அரசுப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு மே 21ம் தேதி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டன .

டிஎன்பிஎஸ்சி

இந்த தேர்வுகளின் மூலம்  5,529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுகளை எழுத  6.82 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 4,012 தேர்வு மையங்களில்  நடைபெற்ற இந்த தேர்வுகளைசுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது.குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் . 1,83,285 பேர் தேர்வு எழுத வரவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

டிஎன்பிஎஸ்சி

மேலும்,குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்,  ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் அதிகாரப்பூர்வமாக  https://www.tnpsc.gov.in/  என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின்,ஜூன் 3 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web