நாளை முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!! மாணவர்களே தயாரா?!

 
நீட்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வு அவசியம். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு  ஜுலை 17ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு  குறித்து  அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது

தேசிய தேர்வு முகமை

எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள்  இதில் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களான செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் இவைகளை தேர்வு கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி  குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மாநில அளவில் நடத்தப்படும்!
நீட் தேர்வுகள்  பிற்பகல் 2 முதல் 5.20 மணி வரை நடைபெறும். தேர்வு மைய வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள்  இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டு நீட்த் தேர்வு ஹிந்தி , தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட்தேர்விற்கான ஹால் டிக்கெட்டை  தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web