மகிழ்ச்சி!! மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் விண்ணப்பம் நீக்கம்!!

 
மேகதாது

அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.இதற்கிடையில் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழகம் தெரிவித்தது. இது குறித்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘‘மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார்.

மேகதாது

இந்நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருக்ன தலைமையிலான சட்டசபை கட்சி தலைவர்கள் குழு, மத்திய நீர் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி  ஆலோசிக்க கூடாது என்பதை வலியுறுத்தியது.கர்நாடக அரசு சார்பில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மேகதாதுவில் அணைகட்ட சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விரிவான அறிக்கையை ஜல்சக்தி துறை, காவிரி ஆணையம் இறுதி செய்ய வேண்டும். இறுதி செய்தால் மட்டும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும்’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எனவே இதன் மூலம் தமிழக, கர்நாடக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் சுமூகமான முடிவு எட்டிய பிறகே விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது தமிழக அரசின் ஓயாத முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள், அரசியல் ஆலோசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web