மகிழ்ச்சி!! சற்றே குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு!!!

 
கொரோனா

இந்தியாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 17,336 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 15,940 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்து 234 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 974 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,425 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 61 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 91 ஆயிரத்து 779 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,96,94,40,932 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 15,73,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web