தலைக்கேறிய கோபம்! ஸ்விக்கி ஊழியரை நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்! வீடியோ!

 
Swiggy ஸ்விக்கி

ஒரு நிமிஷம் தான்... ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு நம்ம ஊர்ல சொல்வாங்க இல்லையா? அப்படி, உணவு டெலிவரி செய்வதற்காக வேகமாக குறுக்கு வழியில் எதிர் திசையில் வந்து மோதிய ஸ்விக்கி ஊழியரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார் இளம் பெண் ஒருவர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேசம், ஜபல்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் டெலிவரி செய்ய பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையில் அவரது பைக் தனது ஸ்கூட்டி மீது மோதியதால் காயமடைந்ததாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் கூறி உள்ளார்.



உணவு டெலிவரி நிறுவன ஊழியரை பெண் ஒருவர் தன் காலில் உள்ள செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சுற்றி நிற்கும் பொதுமக்கள் நிறுத்தச் சொன்னாலும் அந்த பெண் தொடர்ந்து அந்த நபரை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்த பெண் அவரை எட்டி உதைத்துள்ளார்.

erweg

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண் ஸ்கூட்டியில் செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.  பைக் ஓட்டி வந்த டெலிவரி ஊழியர் சாலையின் தவறான பக்கத்தில் சென்றதாக ஒரு சிலர் சுட்டிக்காட்டினர்.

தவறான பாதையில் டெலிவரி ஏஜெண்ட் வந்தது தவறு என்பதை ஏற்றுக் கொண்ட பலர், அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதத்தை கண்டித்துள்ளனர். அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், அந்தப் பெண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.  பலரும், ஸ்விக்கி ஊழியரை அந்த பெண் அடித்த போது, தடுக்க சென்றனர். அப்போது, ‘நஷ்டம் எனக்கு தான். உங்களுக்கு கிடையாது’ என்று பதில் கூறியிருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் அந்த பெண்ணைத் தேடி வருகின்றனர்.

தங்களது கணவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு எங்களது வாழ்த்துகள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

செயற்கை காலுடன் நடக்கும் யானை!! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!