இன்று மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சர் ஆலோசனை!!

 
மன்சுக் மாண்டவ்யா

….
கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்  கடந்த 13ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

மன்சுக் மாண்டவியா கூட்டம்

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார். மேலும் தடுப்பூசி செயல்பாடுகள், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மத்திய சுகாதாரத்துறை

அப்போது 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாத 6 சதவிகித நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி
இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புக்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன்  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா  இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web