இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் கனமழை!! மக்களே உஷார்!!

 
மழை


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இன்று முதல் ஜூன்ம் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இடி மின்னல் மழை

அத்துடன் ஜூன்  26,  27 தேதிகளில்  கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 27  டிகிரி செல்சியஸாகவும்  இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை
கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை 6 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர்,  சேலம் மாவட்டம் மேட்டூர்,  தஞ்சை மாவட்டம் பூதலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  மேலும் இன்று குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web