20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

தமிழகத்தில் இன்று அக்டோபர் 16ம் தேதி முதல் அக்டோபர் 19 வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குமரிக் கடல் பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மழை
மேலும்  தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web