நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!

 
நயன் விக்கி

தமிழ் சினிமாவின் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவர்  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா . இவர் சமீபத்தில் தனது  காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை   மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நயன் விக்கி

 அதில் தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பலருக்கு ஒரே குழப்பம், ஜூன் 9-ம் தேதிதானே இருவருக்கும் திருமணம் நடந்தது, அதற்குள் எப்படி குழந்தை பிறப்பு என குழம்பிவிட்டனர்.

அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதிலும் சர்ச்சை எழுந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளை நயன்-விக்கி தம்பதி மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் அலெக்சாண்டர். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் தம்பதி மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று புகார் அளித்துள்ளார்.

அதில், திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து பல கட்டங்களாக முயற்சி செய்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் தான் செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடியும். இந்நிலையில் நட்சத்திர தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தம்பதியர் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நயன் விக்கி

மேலும் மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம். இது ஏற்புடையதல்ல. இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் செயல். மேலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றிருப்பது விதிகளுக்கு உட்பட்டு நடந்துள்ளதா என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருந்து வருவதும் சட்டத்தை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வாடகைத்தாய் நியமித்தலில் இருந்து எந்த மருத்துவமனையில் கருத்தரித்தல் நடந்தது போன்ற முழு விவரத்தை காவல்துறை கண்டறிந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web