ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை!

 
மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

இம்மாதம் ஜூலை 11ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனித் திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.

17 வருஷங்களுக்குப் பிறகு 4 வாசல்களும் திறக்கப்பட்ட நெல்லையப்பர் ஆலயம்! பக்தர்கள் உற்சாகம்!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் இம்மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நெல்லையப்பர் காந்திமதி திருநெல்வேலி சிவன் பிரதோஷம் கடவுள்

இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நடைபெறும். அதனால் அத்தைகைய பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஈடு செய்யும் வகையில் 23ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web