மனைவி வசைபாடினால் கணவர் விவாகரத்து கோரலாம்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
court order

கர்நாடக மாநிலம் பெலாகாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இளைஞரின் மனைவி, உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும் தன்னை  ஆண்மையற்றவன் என அடிக்கடி கூறி வருகிறார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் மனைவி இப்படி கூறி வருவதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் என்னை கொடுமைப்படுத்துவது போல் உணர்கிறேன். எனவே என் மனைவியிடம் இருந்து எனக்கு விவகாரத்து வாங்கித் தர வேண்டும்" என்று கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்து இளைஞரின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Chennai High Court
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஒரு நபரை எந்தவிதமான மருத்துவ ஆதாரமும் இல்லாமல் அவரது மனைவி ஆண்மையற்றவர் என்று  உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் கூறுவது மிகக் கொடுமையானது. மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட கணவரின் மரியாதையை குலைப்பதுடன் அவருக்கு கடுமையான மன உளைச்சலையும், வலியையும் ஏற்படுத்தும்.

 ஒரு நல்ல பெண்மணி இவ்வாறான பொய் குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டார். ஆண்மையற்றவர் என பொய் குற்றச்சாட்டை வைப்பது என்பது நிச்சயம் கொடுமைப்படுத்துதலுக்கு சமமான ஒன்று. எனவே இந்து திருமணச் சட்டம் 13 (1) பிரிவின் கீழ் இந்த மனு உறுதி செய்யப்படுகிறது. எனவே, கணவரை ஒரு மனைவி உறவினர்கள் முன்னிலையில் ஆண்மையற்றவர் என பொய்யாக குற்றம்சாட்டும் பட்சத்தில், அந்தக் கணவர் 'கொடுமைப்படுத்துதல்' என்ற அடிப்படையில் மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரலாம்" என தீர்ப்பு அளித்தனர். கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு  தற்போது இளைஞருக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது குறித்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வரலாறு காணாத தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web