நானே பொதுச்செயலாளர்!! சசிகலா ஆவேசம்!! அனல்பறக்கும் அரசியல் களம்!!

 
சசிகலா

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. அதிலும் சமீபகாலமாக ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கி வரும் நிலையில்  ஜூலை 11 ம் தேதி  பொதுக்குழு நடைபெற இருக்கிறது. இந்த  பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் படி ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், அதிமுகவில் ஏற்படும் சலசலப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான  சசிகலா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்  “அதிமுகவின் சட்டவிதிகளின்படி நானே அடிமட்ட தொண்டர்களின் பொதுச்செயலாளர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவருக்கு நிறைய தொந்தரவுகள் ஏற்பட்டன.

சசிகலா

அதைப்போல புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவும் நிறைய சவால்களுக்கு பிறகே கட்சியை ஒன்று படுத்தி வழிநடத்தினார்.அந்த வகையில், அம்மாவின் மறைவுக்கு பிறகு தற்போது கட்சியில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக விரைவில் இதிலிருந்து மீண்டு வந்து, ஒன்று சேர்ந்து நிச்சயமாக ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அடுத்த ஆட்சியாக அதிமுக ஆட்சி மலரும் எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web