மோடி தலைமையில் நான்! பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்!

 
ஹர்திக் பட்டேல்

ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகுகிறார் என்பது தான் மத்திய அரசியலில் பெரும் பேச்சாக இருந்து வந்தது. நான் பாஜகவில் சேரவில்லை என்று விளக்கமெல்லாம் தந்தார் ஹர்திக். பிரச்சனைகள் பெரும் விவாதப்பொருளானது. சப்தமில்லாமல், தனது ட்விட்டர் கணக்கின் முதல் பக்கத்தில் இருந்த காங்கிரஸ் செயல் தலைவர் eன்கிற வார்த்தைகள் நீக்கியிருந்தார். தற்போது, நான் பிரதமர் மோடி தலைமையில் என்று பதிவிட்டு, பாஜகவில் சேர்வதை உறுதி செய்துள்ளார் ஹர்திக். குஜராத் மாநிலத்திலுள்ள ஒபிசி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் படேல். 2012-ம் ஆண்ட ‘சர்தார் படேல் குழு’ என்ற அமைப்பில் இணைந்த இவர், குறுகியகாலத்தில் குர்மி, பட்டிதார் உள்ளிட்ட படேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2015-ம் ஆண்டு இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய இவர், ஓ.பி.சி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

இதையடுத்து, 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். அதன்பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், ட்விட்டர் பக்கத்தில் இருந்த காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து விலகப்போகிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

ஹர்திக் பட்டேல்

இந்த நிலையில், கடந்த மாதம் 18-ந் தேதி காங்கிரசில் இருந்து அனைத்து பொறுப்புகளையும் ஹர்திக் படேல் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

கடந்த சில நாட்களாக காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில், ஹர்திக் படேல் இன்று முறைப்படி பாஜகவில் இணைவார் என்ற தகவல்கள் மட்டும் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹர்திக் படேல்  ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் படேல்

அதில், “நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பூஜைகளை அவர் இன்று காலை மேற்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web