அசாதுதீன் ஓவைசி, யதி நரசிங்கானந்த் மீது IFSO வழக்கு பதிவு!! பரபரக்கும் அரசியல் களம்!!

 
ஓவைசி

பாஜகவின் செயல்பாடுகளை தொடர்ந்து கடுமையான விமர்சித்து வருபவர் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவை. தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை  கூறி வருகிறார். இது குறித்து டெல்லி காவல்துறை அசாதுதீன் ஓவைசி, யதி நரசிங்கானந்த் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.  சர்ச்சையான  தகவல்களை வெளியிட்டு வருவதாக ஐஎஃப்எஸ்ஓ பிரிவால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஓவைசி
நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு  கேடு விளைவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியதாகவும், சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  எப்ஐஆரில் சுவாமி யதி நரசிங்கானந்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன்  பாஜக தலைவர் நவீன் ஜிண்டால் மற்றும் பத்திரிக்கையாளர் சவா நக்வி  மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 

ஓவைசி
இந்த விவகாரம் குறித்து  பதிவு செய்யப்பட்ட 2 எஃப்ஐஆர்களில் ஒன்று நுபுர் ஷர்மாவுக்கு எதிராகவும், மற்றொன்றில் நவீன் ஜிண்டால், ஷதாப் சௌஹான், சப் நக்வி, மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி மற்றும் அனில் குமார் மீனா ஆகியோருக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நூபுர் ஷர்மா மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சை கருத்துக்களை வெளியிடுதல், எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலங்களை காயப்படுத்துதல் அல்லது அசுத்தம் செய்தல், மற்றும் பொதுக் கொடுமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் இவைகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கலவரத்தை தூண்டும் சூழ்நிலைகளை உருவாக்கியதாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கை (IFSO) பிரிவால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web