மறுபடியும் மொதல்..ல இருந்தா!! இந்தியா முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்வு!! வாகனஓட்டிகள் அதிர்ச்சி!!

 
சுங்கச்சாவடி

இந்தியாவில்  தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை அமைக்க ஆகும் செலவுகள் கணக்கீடு செய்யப்பட்டு சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்திஅய முழுவதும்  461க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்தும்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன.தமிழகத்தில்  உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படுகின்றன.

சுங்கச்சாவடி

அந்த வகையில்  ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படும் முறைக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய சுங்கக் கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுங்கச் சாவடி

அதன்படி, ஓவர்லோடு ஏற்றிவரும் கனரக வாகனங்களால் சாலைகளில் அதிக தேய்மானம் ஏற்படுவதால், கனரக வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால்  வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்