இம்ரான்கான் வீட்டுக்காவலில் சிறை !! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!!

 
இம்ரான்கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் . தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழலில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை  உருவாகியுள்ளது. இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி  பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு  வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது.  

இம்ரான்கான்

கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான்கானை எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அத்துடன் அவர்  தற்போது வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து இம்ரான்கான் வீட்டிற்கு முன் ஆயிரகணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்து உள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் தலைவர்கள் தாரிக் ஷாபி, ஹமீத் ஜமான் மற்றும் சைப் நியாசி ஆகியோர் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான்கான்

இந்நிலையில்  இம்ரான்கான் தனக்கு ஆதரவு திரட்ட மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைபர் பக்துன்குவா அல்லது பஞ்சாப் அல்லது ராவத் டி-கிராஸில் தெற்கில் இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பாகிஸ்தான்  தலைநகருக்குள்  இம்ரான்கான் நுழைய முயன்றால், இஸ்லாமாபாத்திற்கு நுழைவதற்கு முன்பு அவரை  கைது செய்ய அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web