10,000 பள்ளிகளில், 18 சதவிகிதத்திற்கும் கீழிறங்கிய மாணவர்கள் அட்மிஷன்! உடனே ஆய்வு நடத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு!

 
மாணவர்கள்

தமிழகத்தில் இன்றைய தலைமுறையினர் அனுபவிக்கும் கல்வி வசதி கிடைப்பதற்காக ஒரு தலைமுறை இளைஞர்கள் போராடினார்கள். பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே அனைவருக்கும் கல்வி என்கிற கனவு சாத்தியமானது. பள்ளிக் கூடங்களில் தான் சாதி, மதங்கள் பார்ப்பதில்லை என்று படித்த நிலையில், இன்று கல்வி கூடங்களிலும் மாணவர்கள், நடுரோட்டில் சாதி சண்டை போட்டுக் கொ(ல்)ள்ளும் அளவுக்கு அவர்களை தவறாக வழிநடத்தி வைத்திருக்கிறோம். இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக சுமார் 10,000 பள்ளிகளில், 18 சதவீதத்துக்கும் குறைவாகவே எஸ்.சி மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றிருக்கிறது. பெரும் வேதனை தருகிறது. தமிழகத்தில் 18 சதவீதத்துக்கும் கீழ் உள்ள எஸ்.சி. மாணவர்கள் சேர்க்கை கொண்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வி இணை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிருத்துதாஸ் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, இது குறித்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

வகுப்பறைகள்
அதில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் எஸ்.சி மாணவர்கள் சேர்க்கை பொது கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் 20 சதவீதத்துக்கும் மேலான எஸ்.சி. மாணவர்கள் சேர்க்கை 13 ஆயிரம் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில ஆயிரம் பள்ளிகளில் இது 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. அதே சமயம் 18 சதவீதத்துக்கும் கீழ் எஸ்.சி மாணவர்கள் சேர்க்கை 10,000 பள்ளிகளில் இருந்து வருகிறது வேதனை அளிக்கிறது.

1,000 பள்ளிகளில் எஸ்சி மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கு குறைவாகவும், 100 பள்ளிகளில் 0 சதவீதமாகவும் மாணவர்களின் சேர்க்கை உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இது குறித்த புள்ளி விவரங்களை அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும் இது பற்றிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. 

இனி வரும் காலங்களில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்கு கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, மாணவர்களின் சேர்க்கைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து தீவிரமாக பரிசீலித்த தமிழக பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாணவர்கள்

அதில், எஸ்சி மாணவர்கள் சேர்க்கை அரசுப் பள்ளி உட்பட சில ஆயிரம் பள்ளிகளில் 18 சதவீதத்துக்கும் கீழாகவும், 1000 பள்ளிகளில் 5 சதவீதத்து-க்குக் குறைவாகவும் உள்ளது. எனவே 18 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை கண்டறிந்து முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அதற்கான காரணங்களை அடையாளம் கண்டு மாணவர் சேர்க்கைக்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் கூறி உள்ளார்.இதனால் முதன்மை கல்வி அதிகாரிகள் வேகமாக ஆய்வு மேற்கொண்டு தங்கள் பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web