நீர்வரத்து அதிகரிப்பு! 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
மேட்டூர் அணை

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக படிப்படியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் அதிகாலை மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணை அதன் கொள்ளளவையும் எட்டிய நிலையில் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டாலும், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறப்பு

இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர் சரிவில் மேட்டூர் அணையின் நீர்வரத்து!!.. தொடர்ந்து 16 நாட்களாக 120 அடியாக நீடிப்பு!!..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web