டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்திய மகளிர் அணி! இலங்கையை வீழ்த்தி சாதனை!

 
மகளிர் கிரிக்கெட் இந்தியா

டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை, இலங்கை அணியைத் தோற்கடித்து வென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.

இந்த நிலையில் மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மிரிதி மந்தனா மகளிர் கிரிக்கெட்

இதனால் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

தொடக்க வீராங்கனைகளாக ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். தொடங்கம் முதல் மந்தனா அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். மறுபுறம் ஷாபாலி வர்மா 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

மகளிர் கிரிக்கெட்
மறுபுறம் அதிரடியாக ஆடிய மந்தனா அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web