இன்போசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா?! ஊழியர்கள் அதிர்ச்சி!!

 
இன்போசிஸ்

இந்தியாவின் முண்ணனி மென்பொருள் நிறுவனங்களில் முண்ணனியில் இருப்பது இன்போசிஸ் நிறுவனம். இந்நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது,  இதன் தலைவராக ரவிக்குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்போசிஸ்

ரவிக்குமார் ராஜினாமா குறித்து, பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து சேவைகள், டிஜிட்டல் மாற்றம்,தொழில் வளர்ச்சி, பாரம்பரிய தொழில்நுட்பம், பொறியியல், தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் இன்ஃப்ரா சேவைகளை ஆகியவற்றை கவனித்து கொண்டார்.

இன்போசிஸ் தலைவராக இருந்த ரவிக்குமார் ராஜினாமா செய்தது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு என அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவிக்குமார், இன்போசிஸில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பணியாற்றியவர். அவர் 2016 ல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்போசிஸ் நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தார்.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு வருகிற 13-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கவும் முடிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.65 சதவிகிதம் சரிந்து 1,423.90 ரூபாய்க்கு வர்த்தகம் முடிவடைந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web