ஜெய்ஸ்ரீராம் சொல்லிக்கொண்டே தோப்புக்கரணம் போடும் இஸ்லாமியர்கள் !! வைரலாகும் வீடியோ!!

 
தோப்புக்கரணம்

 

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா,  முகமது நபிகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் உருவாகின. இதையடுத்து, நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.  மேலும், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தன. அதையடுத்து, பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோல, டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை மேற்கொண்டது.

 டெல்லி போலீசார் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மற்றும் சபா நக்வி, பூஜா ஷகுன் பாண்டே, ஷதாப் சவுகான், மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய பக்கிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம், தேகூர் கிராமத்தில் உள்ள கோண்டா பகுதிக்குச் சென்ற 3 இஸ்லாமிய பக்கிரிகளை வழிமறித்த சில இந்து இளைஞர்கள், “உங்களுடைய பெயர் என்ன... நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்... நீங்கள் ஆதார் அட்டையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவீர்கள்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த  வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், கையில் பெரிய குச்சியுடன் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருக்க, அவரைச் சுற்றி பலர் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த இளைஞர்கள் இஸ்லாமிய பக்கிரிகளிடம் வாக்குவாதம் செய்த நிலையில், அவர்களை மிரட்டி தோப்புக்கரணம் போடவைப்பதுடன், ஜெய்ஶ்ரீராம் எனக் கூற சொல்லி வற்புறுத்துகிறார்கள்.இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரைக் அப்பகுதி போலீசார் கைதுச் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web