முஸ்லீம்கள்3 பெண்களை திருமணம் செய்யக் கூடாது!! முதல்வர் மீண்டும் சர்ச்சை பேச்சு!!

 
அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த எந்தவொரு ஆணும், 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையில் அஸ்ஸாம் மாநில அரசு தெளிவாக உள்ளது. தலாக் மூலம் விவாகரத்து பெறும் முறைக்கு பதிலாக சட்டப்படி விவாகரத்து கொடுங்கள் என்று கூறினார்.

இஸ்லாம் திருமணம்

மேலும் அவர் கூறும்போது, ‘‘பெற்றோர்கள் தங்களின் சொத்துக்களை மகன்களுக்கு தருவதுபோல மகள்களுக்கும் சரிசமமாக வழங்க வேண்டும். மேலும் மனைவிக்கு 50 சதவீத பங்கை கொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் பா.ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் கருத்தும், ஒவ்வொரு முஸ்லிம் மக்களின் கருத்தும் ஒருமித்ததாக உள்ளது.

பிரதமர் மோடியின் செயல் திட்டங்களால், வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. பிரதமரின் கவனம் வடகிழக்கு மாநிலங்கள் மீது இருந்து வருவதன் காரணமாக இந்த வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.

அஸ்ஸாம் முதல்வர்

ஏற்கனவே அசாம் முதல்வர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசும்போது, ‘‘அனைத்து முஸ்லீம்களுமே அடிப்படையில் இந்து தான். மாதம் மாறி சென்றவர்களை மீண்டும் மறு மதமாற்றம் செய்வது ஒன்றே சாத்தியம். அது தான் சரியான கல்வி. ஆனால் அதேநேரம் இதற்காக அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் அல்லது தெய்வத்தை வணங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தென்கிழக்கு ஆசிய பகுதி இஸ்லாமிய நாகரிகங்களால் தீண்டப்படாமல் இருக்க அசாம் தான் முக்கிய காரணம் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web