திருமணத்தில் தாடி வைக்க தடை!! அதிரடி உத்தரவு !! பரிதவிக்கும் இளைஞர்கள்!!

 
தாடி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் மொத்தம் 19 கிராமங்களைச் சேர்ந்த குமாவத் என்ற சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த அனைத்து கிராமங்களும் ஒன்று சேர்ந்து ஒரு வினோத உறுதிமொழியை எடுத்துள்ளது. அதில், ‘‘நாகரீகம் என்ற பெயரில் இளைஞர்கள் தாடி வைத்து இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தங்கள் திருமணத்தின் போது எந்த ஒரு மணமகனும் தாடி வைத்திருக்க கூடாது. அப்படி தாடி வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களின் திருமணம் நிறுத்தப்படும். மேலும் தாடியை க்ளீன் ஷேவ் செய்தால் மட்டுமே மணமகனை மணமகள் கழுத்தில் தாலி கட்ட அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாடி

மேலும் திருமண வைபவத்தின் போது டிஜே டான்ஸ், டெகரேஷன்கள், ஆடம்பரமாக அதிக விலை கொடுத்து ஆடைகள் வாங்குவது போன்றவற்றுக்கும் குமாவத் சமூகத்தினருக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்வுகளின் போது இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளால் செலவு அதிகமாகும் என்பதால் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெட்டி திருமணம்

இந்த அனைத்து உத்தரவுகளையும்  பாலியில் உள்ள கிராமத்தினர் மட்டுமல்லாது மொத்த ராஜஸ்தானியர்களும் பின்பற்றும்படி அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 20 ஆயிரம் குமாவத் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்கள். இவர்கள் வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக வெளியூர்களில் குடிபெரும் பட்சத்தில் அங்கேயும் இதுபோன்ற உத்தரவுகளை குவாத் சமூகத்தினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வினோதம் என்றாலும், பாரம்பரியத்தையும், வீண் செலவுகளையும் குறைக்கும்படியான இந்த உத்தரவுகள் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் அனைவரும் பின்பற்றும் பட்சத்தில் பொருளாதார பின்னடைவில் இருந்து தப்பிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web