இனி கல்லூரி மாணவர்களுக்கு இது கட்டாயம்! வெளியானது அறிவிப்பு!

 
தமிழ்

தமிழகத்தில் இனி கல்லூரி மாணவர்களுக்கு பட்டப்படிப்பில் தமிழ் மொழி பாடமும் கட்டாயம் என்று உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது கல்வித் துறையில் பல்வேறு  மாற்றங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  பி.காம்., பிபிஏ., பி.சி.ஏ., போன்ற படிப்புகளில் 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளிலும் இனி மேல் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. 

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்
அதில் தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் மட்டுமே தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி  மற்ற பல்கலைக்கழகங்களிலும்  Bcom, BBA, BCA பாடப்பிரிவுகளில்  2ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்டம் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் பாடம் இடம்பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள்
ஏற்கனவே பாடப்பிரிவுகளில் முதல் ஆண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை நடப்பு கல்வியாண்டிலேயே உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.அதாவது அடுத்த செமஸ்டர் தேர்விலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web