10000 ரன்களை குவித்து ஜோரூட் சாதனை!! 90s கிட்ஸ் கொண்டாட்டம்!!

 
ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோரூட் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்து 90’ஸ் கிட்சுக்கு பெருமை சேர்த்துள்ளார்.இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்ற ரீதியில் ஆடத்தொடங்கியது. முதல்கட்டமாக போடப்பட்ட டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு சுருண்டது.

ஜோ ரூட்
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. 92 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு 7 விக்கெட்டை மட்டுமே எடுத்தது. பின்னர் முட்டிமோதி 141 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் சரிவு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 2வது இன்னிங்சில் விளையாடிய வில்லியம்சன், வில் யங், டாம் லாத்தம், கான்வே உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் தொய்வுடன் விளையாடினர்.

இருப்பினும் அடித்து ஆடிய டேரல் மிட்செல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 96 ரன்களை எடுத்த டாம் பிளாண்டல் ஆகியோரை தவிர வேறு யாரும் பிரகாசிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணி மொத்தம் 285 ரன்களில் பெவிலியன் திரும்பியது.இதனால்  இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் விளையாடிய வீரர்கள் அலெக்ஸ் லீஸ் 20 ரன்னும், ஷாக் கிராலி 9 ரன்னும், போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தனர்.

ஜோ ரூட்
இவர்களைத் தொடர்ந்து களம் கண்ட ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதன் மூலம் ஸ்டோக்ஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. 4வது நாள் ஆட்டம் 15வது ஓவரிலே முடிந்துவிட்ட காரணத்தால், இன்றைய நாளுக்கான டிக்கெட் விற்பனை ரசிகர்களுக்கு திரும்ப அளிக்கப்பட உள்ளது.

ஜோரூட் அடித்து விளாசிய சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை படைத்தார். ஜோ ரூட்டை பற்றி கூற வேண்டுமென்றால், அவர் ஒரு 90ஸ் கிட்ஸ் ஆவார். 1990 களில் பிறந்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ஆயிரம் ரன்களை எட்டி பெரும் சாதனை படைத்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web